
கனவுச் சாலையின் தாழ்வாரம்

Race TNPSC Ad
அப்புறம் என்னப்பா? புள்ள வயசுக்கு வந்துருச்சு, எப்ப கல்யாணம்? என்ற சராசரி உரையாடல்களுக்கு இடையே உடைந்த சாதனைக் கனவுகள் உண்டு.
அப்பன் இல்லாத வீடு, நீதான் ராசா சம்பாதிச்சு இந்த குடும்பத்தை கரையேத்தணும் என்ற பொறுப்புக்கடலில் மூழ்கிப்போன ஆசைக் கப்பல்கள் உண்டு.
இவற்றையெல்லாம் கடந்து, அவ்வப்போது, ஆங்காங்கே, நம்பிக்கையூட்டும் குரல்கள், முகங்கள் நம் கண்ணில் வந்து போவதுண்டு. ஏதோ பெயர் தெரியாத ஊரிலிருந்து ஒரு கலெக்டர், வரைபடத்தில் எங்கு உள்ளது என்று தேட வைக்கும் கிராமத்திலிருந்து ஒரு வங்கி அதிகாரி என்று, நாளை இன்னும் நலமாய் இருக்கும் என நெஞ்சில் உரமேற்றும் கதைகள் ஆயிரம் உண்டு.
இப்படி ஆயிரமாயிரம் கதைகள் கொண்டதே Race.

இது வெறும் பயிற்சிப் பட்டறை மட்டும் அல்ல. கனவுகள் சுமந்து வரும் கண்களில், தகுதி எனும் தன்னம்பிக்கையை விதைக்கும் தாழ்வாரம்.
மொத்தம் இத்தனை மாணவர்கள், அதில் இத்தனை பேர் தேர்வு பெற்றனர், இந்த ஆண்டு இதுதான் எங்கள் வெற்றிப் பதிவு என்ற வெற்றுப் பெருமை பேசாமல், Race ன் உண்மையான கதைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல விரும்பினோம்.
அப்படி உருவானதுதான் ‘ஆயிரத்தில் ஒரு கதை’ என்ற முயற்சி. கைக்குழந்தை ஏந்தி நேர்காணலுக்கு காத்திருக்கும் ஒரு பெண்ணின் கதையை காணொளியாக்கினோம். இது கற்பனையல்ல, Race நிறுவனம் உருவாக்கியுள்ள சாதனை அலைகளின் ஒரு ஓசை மட்டுமே.

இந்த காணொளி தொலைக்காட்சியில் வெளியானது. மேலும், Race ல் படித்த மாணவர்களைக் கொண்ட வெளிப்புற பேனர்கள், செய்தித்தாள் விளம்பரங்கள் என்று பல வித ஊடங்கங்கள் வாயிலாக மக்களை சென்றடைந்தது.
வெற்றியை வெறும் எண்ணாக மட்டுமே பார்க்காமல், பிறர் எண்ணிப் பார்க்கும் வண்ணம் இந்த விளம்பரம் அமைந்தது.

இந்தக் காணொளியின் வெற்றியைத் தொடர்ந்து, வங்கித் தேர்வின் பயிற்சிகளில் முன்னிலை வகுத்த Race, TNPSC தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் தொடங்கியது.
அதற்காக, ‘வெற்றிக்கு வேரிடு’ என்ற இரண்டாம் பகுதியையும் தொடங்கினோம்.
Race என்ற நிறுவனத்தின் தனித்தன்மையை, உண்மைக்குப் புறம்பில்லாமலும், மக்களுக்கு எளிதில் புரியும் வகையிலும், இதைப் பார்க்கும் மாணவர்களுக்கு தங்களாலும் முடியும் என்று நம்பிக்கையை அளிக்கும் வகையிலும் இந்தக் காணொளி வடிவமைக்கப்பட்டது.
சத்தமின்றி இந்த சமூகத்தில் ஒரு புதிய மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் Race என்ற நிறுவனத்தை, ஒளியாலும், ஒலியாலும் மக்களுக்கு இன்னும் சற்று அருகில் கொண்டு சென்றது இந்தக் காணொளி.